இன்றைய உலகில் உணவுக் கலாச்சாரத்தில் வரைமுறை இல்லாத காரணத்தினால் பல வகையான உணவுகளை உண்டு மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் உண்டாவதை தடுக்க சிறந்த ஒரு உணவாக அமைகிறது குதிரைவாலி தயிர் சாதம்.
குதிரைவாலி தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
குதிரைவாலி – கால் கப் .
தயிர் – அரை கப் .
பால் – கால் கப் .
கேரட் – 2 .
கொத்தமல்லி – 1கட்டு .
தண்ணீர் – ஒரு கப் .
கடுகு – தேவையான அளவு.
உளுத்தம்பருப்பு – தேவையான அளவு.
இஞ்சி ,பச்சைமிளகாய் ,கருவேப்பிலை – தேவையான அளவு .

குதிரைவாலி தயிர் சாதம் செய்யும் முறை:
சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ,அதில் கால் கப் குதிரைவாலி அரிசியை சேர்த்து நன்றாக வேக வைக்கவும் .
பின்பு வெந்ததும் தண்ணீரை முழுவதுமாக நீக்கி தானியம் குழைவாக இருக்கும் வடிவில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பின்பு வெந்த குதிரைவாலி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சிறிதளவு பாலையும் ,தயிரையும் சேர்த்து நன்றாக கிளரவும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
பின்பு அந்த கலவையினை ரெடியாக செய்து வைத்துள்ள குதிரைவாலி தயிர் சாதத்தில் சேர்த்து கிளரினால் சுவையான குதிரைவாலிதயிர் சாதம் ரெடி.
மேலும் குளிர்ச்சிக்காக தேவையான பழவகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குதிரைவாலி அரிசியின் பயன்கள்
வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை சரிசெய்கிறது .
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.
குதிரைவாலி அரிசி மற்றும் மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்கள் வாங்க சிறந்த இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:49:05.