இப்போது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் குறித்து பேசுகிறோம், ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறோம்.
அதற்கான சிறந்த உதாரணம் சமையல் எண்ணெய்.
ரீபைண்டு ஆயில், டபுள் ரீபைண்டு ஆயில் என்பது எல்லாம் உண்மையில் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே..
இதெற்கெல்லாம் காரணம் பராம்பரியமான பல விஷயங்களை விட்டு விலகியிருப்பதுதான்.
மரச்செக்கில் அரைத்து எடுத்து உணவை உண்ட கடந்த தலைமுறைகூட உடல் நலத்தில் பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இந்த தலைமுறை எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே ஏகப்பட்ட நோய்க்கு உள்ளாகிவருகிறது.
ஆகவே மரச்செக்கு எண்ணெய் உபயோகியுங்கள் என்று பொத்தாம் பொதுவாக தற்போது சொல்லிவருகின்றனர்.
…..
செக்கு எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தயாசம் உண்டு.
இரும்புச்செக்கில் சுமார் 350டிகிரி வெப்பத்தில் அரைத்து தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதைத்தான் செக்கு எண்ணெய் என்றுகூறி பலபேர் விற்கிறார்கள்.
இது எக்காலத்திலும் நம் உயிர் வளர்க்க உதவாது. பலபேர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்கு எண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், இது தவறு.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35டிகிரி வெப்பம் மட்டுமே வரும்.
இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் தாவர எண்ணெய்.
மரச்செக்கு எண்ணெய் விலை அதிகம்தான், உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும்.
ஏதோ ஒரு திரவத்தை தயாரிக்க மேற்ச்சொன்ன மூன்றுமே தேவையில்லை.
மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டேம்.
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்கின்றோம்.
சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான செய்திகளை படித்துவிட்டு, சுத்தமான மரச்செக்கு எண்ணெய் வாங்க நாமக்கல் அல்லது ஈரோடு போக வேண்டியது இல்லை.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் (Refined Oil) வகைகள் என்ற பெயரில் தயாராகும் ஆரோக்கியமற்ற குரூட் எண்ணெய்களுக்கு பதிலாக தற்போது ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் சந்தைக்கு வந்துள்ளது.
ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெயை உற்பத்தி செய்கிறோம்.
சிறிய கட்டிடத்தில் மரச்செக்கு அமைத்து, எள் மற்றும் கடலையைப் பிழிந்து, எண்ணெய் எடுத்து நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வணிகம் செய்து வருகிறோம்.
சந்தையில் விற்பனையாகும் பிற சமையல் எண்ணெய் விலையைவிட கூடுதல் விலையாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த காரணத்திலத்தான்….
நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை அப்படியே பயன்படுத்தினர்.
உடற்பயிற்சி முடிந்ததும் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர்.
அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவேதான், நாங்களும் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில் மரத்திலான செக்கு அமைக்க முடிவு செய்தோம்.
வேம்பு மரத்தில் உலக்கையும், வாகை மரத்தில் உரலும் கொண்ட செக்கு அமைத்து, மின் மோட்டார் உதவியுடன் செக்கை இயக்கி வருகிறோம்.
முதலீட்டுக்கு ஏற்ப, சொற்ப லாபத்தில் விற்பனை செய்து வருகிறோம்.
இயந்திரத்தில் எண்ணெய் பிழியும்போது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்துவிடுவதால், அதில் கிடைக்கும் புண்ணாக்கில் உயிர்ச் சத்துகள் மிஞ்சாது.
ஆனால், மர செக்கில் மெதுவாக எண்ணெய் பிழிவதால், 80 சதவீதம் மட்டுமே எண்ணெய் கிடைக்கிறது. இதனால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.
மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அதிகமிருக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும் உயிர்ச் சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
…..
100% மரச்செக்கு எண்ணெய் தேவைக்கு அழையுங்கள்: 9677 22 76 88
….
Originally posted 2017-05-29 10:34:02.