பொதுவாகவே மீனானது பார்வை மற்றும் உடல் கோளாறுகளை நீக்குவதற்கு மிகச் சிறந்த நிவாரணியாக உள்ளது. மேலும் அது சுவையான கடல் உணவும் கூட, அப்படிப்பட்ட மீனில் கட்லெட் செய்வது எப்படி என்பதை காண்போம்.
மீன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
- ஏதேனும் ஒரு வகை மீன் (முட்கள் நீக்கியது) – ஒரு கிலோ
- பெரிய வெங்காயம் – அரை கிலோ (பொடியாக நறுக்கியது )
- முட்டை – 2
- பிரட் தூள் – தேவையான அளவு
- எலுமிச்சையை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 10
- கொத்தமல்லி இலை – இரண்டு கட்டுகள்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
மீன் கட்லெட் செய்முறை:
- மீனில் முள் ,தோல்களை நீக்கி அதை கூழாக்கி கொள்ளவும் .இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து அதில் மீன் கலவையையும் சேர்க்கவும்.
- சிறிது நேரம் கழித்து எலுமிச்சைச்சாறு ஊற்றி பின்பும் மீண்டும் கலக்கவும்.
- இப்போது கலக்கி வைத்த மசாலாவை கட்லெட் வடிவில் உருண்டையாக உருவாக்கி கொள்ளவும்.
- பின்பு ஒரு கிண்ணத்தில் முட்டை ஊற்றி அதில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலக்கப்பட்ட முட்டை கலவையில் உருண்டை பிடிக்கப்பட்ட கட்லட்டை நனைத்து பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு நிறம் மாறிய உடன் பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான மீன் கட்லெட் ரெடி.
- பெரும்பாலும் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்தது.
இந்து உப்பு , நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-08 10:23:24.