நம்முடைய வாயில் நூற்றுக்கணக்கான அளவில் நுண்ணுயிரிகள் உள்ளது ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தீமையையும், நன்மையையும் பயக்கக்கூடியவை அத்தகைய நுண்ணுயிரிகளை பற்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக நாம் கடைகளில் விற்கப்படும் பலவிதமான டூத்பேஸ்ட்களை பயன்படுத்தலாம் ஆனால் அவை அனைத்துமே கெமிக்கல்கள் நிறைந்தவை.
இவற்றால் பற்கள் தேய்க்கப்படும் பொழுது பளபளப்பாகவும் வாய் துர்நாற்றம் இல்லாமல் இருந்தாலும் சில மணி நேரங்களில் அவை மறைந்து மீண்டும் பழைய நிலைக்கு நாற்றத்தை வீச தொடங்கிவிடும்.
வாய் துர்நாற்றம்:
நம் வாயில் பெரும்பாலும் துர்நாற்றம் வீசக் காரணம் நம்முடைய மாறுபட்ட உணவு நிலைகள் தான்.
நாம் சில நேரங்களில் துரித உணவுகளை உண்ணும் பொழுது அதில் உள்ள மசாலா பொருட்கள் நம் பற்களில் ஒட்டிக்கொள்கிறது. பின்பு அவை சில மணிநேரங்களிலேயே தங்கி விடுவதன் காரணமாக அவையும் வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும் அசைவ உணவுகளை உண்ட பிறகு வாயினை நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும். ஆனால் ,நம்மில் பெரும்பாலோருக்கு அந்த பழக்கம் இல்லாத காரணத்தினால் அசைவ உணவுகளில் வரும் நாற்றம் நம் வாயில் வீசத்தொடங்குகிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் அசைவ உணவு உண்டு உறங்குவதனால் காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்படும்.
சரி இதில் இருந்து தப்பிக்க என்னதான் வழி:
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியை நாம் அறிந்திருப்போம்.
இதில் குறிப்பிடப்பட்டது போல பல்லுக்கு உகந்ததாக விளங்கும் வேப்பங்குச்சி ஆலங்குச்சி ஆகியவற்றை பயன்படுத்தி பற்களை துலக்குவதன் மூலமாக நாம் நீண்ட ஆயுளை பெறுவது மட்டுமின்றி நம் பற்கள் சுத்தமானதாகவும் துர்நாற்றமற்றதாகவும் அமையும்.
ஆனால் இந்த காலத்தில் ஆலங்குச்சி, வேலங்குச்சி கிடைப்பது என்பது நடக்காத ஒன்று ஆனால் நம் வீட்டில் தினமும் பயன்படுத்த கூடிய ஒரு பொருளை நாம் பற்களுக்கு பாதுகாப்பு அரணாகும் பயன்படுத்தலாம் அதைப்பற்றி காண்போம்:
உப்பு
உப்பில் கிருமிகளை அழிக்கக்கூடிய சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. இவை கிருமிகளை அழிப்பது மட்டுமின்றி நம்பற்களில் துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கும் .
மேலும் இது நம் பற்களில் உள்ள அழுக்குகளை நீக்கும் பயன்படும்.
…
உப்பை பயன்படுத்தும் முறை:
தினமும் காலையில் பற்களை துலக்குவதற்கு முன் டூத்பிரஷில் சிறிதளவு உப்பு சேர்த்து பல் விளக்குவது போல நன்றாக தேய்த்து உடனே வாயினை கழுவ வேண்டும் .
பின்பு எப்போதும் போல சாதாரண பேஸ்டினை பயன்படுத்தலாம்.
…
உப்புடன் சேர்த்து காலையில் எழுந்த உடன் வாயினை நல்லெண்ணெயை கொண்டு கொப்பளிக்கலாம்.
தினமும் இரண்டு முறை உப்பினை கொண்டு பல் துலக்கலாம்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 16:02:15.