பொதுவாக வேலை சுமை காரணமாக பலர் தினமும் காலை உணவை தவிர்த்து வருகின்றன. இது உடலுக்கு கேடு தருவதோடு மட்டுமின்றி நம் வயிற்றுப்பகுதியில் பிரச்சினைகளை உண்டாக்கவும் வழிவகுக்கிறது.
மேலும் சிலர் காலை உணவுகளாக அவசரத்திற்கு பர்கர் சாண்ட்விச் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்துவது அவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி காலை வேளை உணவு பழக்கத்தையும் முற்றிலுமாக மாற்றுகிறது.
இதைத் தவிர்க்க இதோ ஈசியான சில ஹெல்தி ப்ரேக்ஃபாஸ்ட் டிப்ஸ்
தினமும் காலையில் பழம் மற்றும் காய்கறி வகைகளை அதிகமாக உண்பது மூலமாக அதிக ஆற்றலோடு இருப்பது மட்டுமின்றி உடல் சுறுசுறுப்பாகவும் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும் இருக்க உதவுகிறது.
வாழைப்பழம்
ஈஸியான மற்றும் ஹெல்தியான உணவு பட்டியலில் முதலிடத்தை வகிப்பது வாழைப்பழம் தான் ஏனெனில் இது அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது மட்டுமின்றி பசியை தூண்டும் முக்கிய காரணியாக அமைகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. தினமும் காலை ஒரு வாழைப்பழமும் இரவு ஒரு வாழைப்பழமும் பாலில் நனைத்து அல்லது சாதாரணமாகவோ உண்பது மூலமாக பல விதமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.
ஆப்பிள்
காலைவேளையில் சிற்றுண்டியை தவிர்க்கும் போது ஆப்பிளை உட்கொள்வதன் மூலமாக அந்த சிற்றுண்டியின் முழுமையான பயன்களை இந்த ஆப்பிள் வழங்குகிறது.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் காலையில் பயன்படுத்துவதன் மூலமாக சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக வைக்க உதவுகிறது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தேர்வு காரணமாக காலை உணவை தவிர்ப்பது வழக்கம் அப்படிப்பட்ட நேரத்தில் ஆப்பிள் கொடுப்பதால் அவர்களுக்கு ஊட்டச்சத்து நோய், எதிர்ப்பு சக்தி வளர்வதோடு மட்டுமின்றி ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது.
வேர்க்கடலை
நிலக்கடலை என்று அழைக்கப்படும் வேர்க்கடலை கூட காலைவேளையில் மிகச் சிறந்த சிற்றுண்டி தான் ஏனெனில் இதை வேகவைத்து உண்பதாலும் வறுத்து உண்பதாலும் பலவிதமான பயன்கள் நம்மை வந்து சேருகின்றன.
காலை வேலைக்கு செல்லும் பொழுதும் வேலை செய்யும் பொழுதும் இதை ஸ்நாக்ஸ் போலவும் பயன்படுத்தலாம்.
வேர்க்கடலையில் மன அழுத்தத்தை போக்கக்கூடிய வலிமை உள்ளது இதனால் வேலையின் போது நமக்கு வேலைச்சுமை குறைவாகவே அமையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதுவும் எடை குறைய உதவுகிறது.
மேலும் இதயம் நோய் சிறந்த தீர்வாக அமைகிறது.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 22:05:51.