ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, நம்முடைய நடவடிக்கைகளையும் நம்முடைய கலாசாரத்தையும் பொருத்தே அமைகிறது.
அந்த நிலையில் நம்மை சுற்றியுள்ள சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு நம்மையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை காண்போம்.
முதலில் நம் வீட்டில் எப்பொழுதுமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் ஒரு சுத்தமான சுற்றுச்சூழல் மட்டுமே சுகாதாரமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் இந்த நிலையில் வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை உடனுக்குடன் வெளியேற்றுவதுடன் வீடுகளை தினமும் சுத்தம் செய்தல் அவசியமாகும்.
வீட்டினுள் சூரிய ஒளி புகும் வண்ணம் வைத்தல் வேண்டும்.
சூரிய ஒளி புகாத வீட்டில் அமைதியும் ஆரோக்கியமும் இருக்காது என்ற ஒரு பழங்கால கூற்று ஒன்று உள்ளது.
இந்த நிலைக்கேற்ப சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு வீடு அமைத்தல் அவசியம்.
தினமும் காலை யோகாசனம் செய்தல் வேண்டும்.
யோகாசனத்தை தனியாக செய்வதற்கு பதிலாக தங்களது வீட்டின் அருகிலுள்ளவருடனும் தனது குடும்பத்தினருடனும் சேர்ந்து செய்தல் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மட்டுமின்றி சிறந்த உறவை உருவாக்கும்.
வீட்டின் சுவற்றில் உள்ள வண்ணங்கள் கூட நம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றன.
ஆம் நம் வீட்டைச் சுற்றி நல்ல வண்ணமயமான நிறத்தில் வர்ணம் செய்வதன் மூலமாக நமது மனம் அமைதி பெறுகிறது மேலும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
வீட்டுக்குள்ளேயே பூச்செடிகளை வளர்த்தலும் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகின்றது .
பூக்களின் அழகும் செடியின் தோற்றமும் நம் கண்களை மெய்சிலிர்க்க வைக்க சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது.
வீடுகளில் துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக எப்பொழுதும் நறுமணம் தரக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது மிகமிக அவசியம். உதாரணமாக ஊதுபத்தி அல்லது ரூம் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக நல்ல சுற்றுச்சூழல் நம்மிடத்தில் அமைய வழிவகுக்கிறது.
இவ்வாறாக உடல் ஆரோக்கியத்தோடு சேர்த்து மன ஆரோக்கியமும் பெற்றால் மட்டுமே நம் வாழ்க்கை முழுமையான ஆரோக்கியத்தை அடையும்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:39:34.