இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்வு வாரப்போகுது. இந்த சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்லா படிக்கணும்னு எல்லா அடிப்படைகளையும் செஞ்சு தராங்க ஆனா அவங்களோட ஆரோக்கியத்தை ??
இன்றைய நிலையில் குழந்தைகள் ரொம்பநேரம் படிப்பதால் அவர்களுடைய உணவு நேரம் பாதிப்படைகிறது . இதை தடுக்க அவர்களுக்கு சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வழங்க இந்த ஹெல்த்தி டிப்ஸ்
1 ) தேர்வு பயத்தின் காரணத்தினாலோ பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவதன் காரணமாகவோ ஒரு சிலர் அதிகாலையில் எழுந்து படிக்கின்றனர் அத்தகைய வேலையில் பிள்ளைகளுக்கு பாலுடன் சேர்த்து நினைவாற்றலை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்து பானங்களை பாலில் கலக்கி கொடுத்தல் வேண்டும்.
2 ) தேர்வு நேரங்களில் சில குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பார்கள். அதை தடுத்து காலையில் கட்டாயமாக சத்தான உணவுகளை வழங்குதல் வேண்டும் , மேலும் காலை உணவுகளில் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது உகந்தது.
3 ) சில குழந்தைகள் நன்றாக படித்தும் அவர்களால் தேர்வை சரியாக எழுத முடியாது ,அதற்கு முக்கியமான காரணம் ஞாபக மறதி. அதை தடுப்பதற்காக குழந்தைகள் உண்ணும் உணவில் நபக சக்தி உடைய வல்லாரை போன்ற உணவுகளை சேர்த்தல் அவர்கள் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு தேர்விலும் சிறந்த மதிப்பெண் பெற வழிவகுக்கும்.
4 ) சிலநேரங்களில் குழந்தைகளின் சோர்வின் காரணமாக அவர்களால் தேர்வை சரியாக எழுத முடியாத நிலை ஏற்படுகிறது இதனை தடுப்பதற்காக அவர்களுக்கு இயற்கை பானங்களை (பழரசம் வீட்டில் செய்தவை ) வழங்க வேண்டும்.
5 ) குழந்தைகளுக்கு தேர்வு நெருங்கும் சமயத்தில் அதிக அளவிலான மன அழுத்தம் ஏற்படும் அதை தடுக்கும் விதமாக யோகாசனம் வழங்குதலும் இயற்கை உணவுகளையும் கொடுத்தல் மன அழுத்தத்தைப் போக்க வழி வகுக்கும்.
6 )தேர்வு சமயங்களில் வெளியில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை தவிர்த்தலும் வெளியில் விற்கும் பழையஎண்ணெய் பொருட்களை தவிர்த்தலும் மிகச்சிறந்த ஒன்றாகும்.
7 )குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்கறிகளையும், பழங்களையும் வழங்குவதோடு ,நட்ஸ், பாதாம், போன்றவற்றை வழங்குதல் மேலும் குழந்தைகளையும் பலப்படுத்தவும் அவர்களை தேர்வில் திறமையை வெளிப்படுத்தவும் உதவியாக அமையும்.
குழந்தைகளே நீங்கள் தேர்வில் வெற்றி பெற உங்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல நீங்களும் நன்றாக படித்து முன்னேற வேண்டும்.
வாழ்த்துக்களுடன்!
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-04 15:09:17.