சீரகம் என்றாலே ஒரு தனி மருத்துவகுணம் நிறைந்ததுதான் அதிலும் கருஞ்சீரகம் என்பது அதீத மருத்துவகுணம் நிறைந்த ஒரு மகத்தான உணவுப்பொருள் .
கருஞ்சீரகம் உருவாகும் விதம் :
சீரக செடியில் பூக்கும் தாவரத்தின் மேல்பகுதியில் இருந்து கருஞ்சீரக விதையானது உருவாக்கப்படுகிறது.
கருஞ்சீரகத்தில் உள்ள இயற்க்கை சத்துக்கள் :
எந்த ஒரு தாவரத்திலும் இல்லாத ஒரு வேதிப்பொருளான தைமோ குவினோன் என்ற ஒரு அபூர்வ வகையான இயர்க்கை சத்து கருஞ்சீரகத்தில் அடங்கியுள்ளது. மேலும் கொழுப்பு அமிலங்கள், கரோட்டின் ,கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளன.
…..
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்:
- கருஞ்சீரகத்தை பாலில் கலந்து உன்பதன் மூலமாக சளி இருமல் போன்ற நோய்களுக்கு தீர்வு வழங்குகிறது.
- காயங்கள் ஏற்ப்பட்ட இடங்களில் இந்த கருஞ்சீரகத்தை பொடியாக்கி தடவுவதன் மூலமாக உடனடியாக தீர்வு கிடைக்கிறது.
- கருஞ்சீரகமானது உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதால் ஏற்ப்படும் அல்சர் நோய் ஏற்படுகிறது. இதை தடுக்க உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்வதால் அல்சர் முற்றிலுமாக குனமாகிறது.
- இன்றைய உணவு பழக்கத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமான மக்களிடையே கானப்படுவதால் அதை தவிர்க்கவும் மேலும் நல்ல கொழுப்பையும் அதிகரிக்கவும் கருஞ்சீரகம் ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.( நல்ல கொலஸ்ட்ரால் நன்மை தரக்கூடியது)
- ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் போட்டு பயன்படுத்துவதன் மூலமாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காணப்படும் வயிற்றுப்பூச்சி முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.
- கருஞ்சீரகம் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் முற்றிலுமாக நீங்கும்.
- கருஞ்சீரகத்தை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.
- உடலில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க தினமும் உணவில் ஒருவேளை கருஞ்சீரகம் பயன்படுத்தலாம்.
- பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை சுத்தபடுத்தவும் இது ஒரு வரமாக அமைகிறது.
- வெந்நீரில் சிறிதளவு தேன் மற்றும் கருஞ்சீரகம் கலந்து குடித்துவர சிறுநீரக கற்கள் நீங்கும்.
- தலைமுடி பிரச்சனைகளை தீர்வு கானும். மேலும் உடலில் உள்ள நச்சுதன்மை வாய்ந்த அமிலங்களை விரைவில் அகற்றிவிடும்.
- தலைவலி ,மூக்கடைப்பு போன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வாக உள்ளது. மேலும் உடல்பருமன் குறையவும் உறுதுணையாக அமைகிறது.
…..
கருஞ்சீரகத்தை யார்யாரெல்லாம் பயன்படுத்தலாம் ??
இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அளவாக பயன்படுத்துதல் நன்மையை தரும்.
Originally posted 2019-11-28 11:23:34.