ஒரு சில பூக்கள் பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அது தன் ஆயுளை ஒரே நாளில் இழந்து விடும் ஆனால் ஒரு சில பூக்கள் பார்க்க அழகாக இருந்தும் அது பிற மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்க வல்லது அப்படிப்பட்ட பூவான ஒரு பூ ஆவாரம் பூ.
அவாரம்பூ பொடி உருவாகும் விதம்:
ஆவாரம் பூ வானது பொடியாக்கப்பட்டு காய்ந்த நிலையில் அது விற்பனை செய்யப்படுகிறது.
ஆவாரம்பூ பொடியின் நன்மைகள் :
- ஆவாரம்பூ பொடியானது தலைமுடி நன்றாக வளர உறுதுணையாக உள்ளது.
- தலை முடி உதிர்தல் பலவீனமான கூந்தல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஆவாரம்பூ பொடி உதவுகிறது.
- ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் நனைத்து துணியின் மூலம் கண்களில் ஒத்தி கொள்வதன் மூலமாக உஷ்ணத்தினால் ஏற்படும் கண் எரிச்சல் குணமாகும்.
- மூலம் பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
- ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல் துர்நாற்றம் நீங்குவதோடு சிறுநீரக கோளாறுகளும் முற்றிலுமாக நீங்குகிறது.
- உணவுப் பொருட்களுடன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து உண்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி அனைத்து வகையான சரும கோளாறுகளும் நீங்குகிறது.
…..
ஆவாரம்பூ பொடி யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
- ஆவாரம்பூ பொடியை பெரியவர்கள் மட்டும் பயன்படுத்துதல் நன்று.
ஆவாரம்பூ பொடியை எப்படி பயன்படுத்தலாம்?
- ஆவாரம்பூ பொடியை உணவில் சேர்த்தும் அல்லது வெந்நீரில் கலந்தும் பயன்படுத்தலாம் .
Originally posted 2019-12-06 13:51:03.